தேசிய செய்திகள்

காஷ்மீர் மக்களை சந்திக்க தனி விமானம் வேண்டாம், சுதந்திரம் வேண்டும் -ராகுல்காந்தி + "||" + On J&K Governor’s ‘will send plane’ remark, Rahul Gandhi’s sharp riposte

காஷ்மீர் மக்களை சந்திக்க தனி விமானம் வேண்டாம், சுதந்திரம் வேண்டும் -ராகுல்காந்தி

காஷ்மீர் மக்களை சந்திக்க தனி விமானம் வேண்டாம், சுதந்திரம் வேண்டும் -ராகுல்காந்தி
மக்கள் மற்றும் முக்கிய தலைவர்களை சந்திப்பதற்கான சுதந்திரத்தை ஏற்படுத்தி தந்தால் காஷ்மீருக்கு வர தயார் என காஷ்மீர் கவர்னருக்கு ராகுல் காந்தி பதில் அளித்து உள்ளார்.
புதுடெல்லி

ஜம்மு - காஷ்மீரில் வன்முறை நடப்பதாக, ராகுல் காந்தி கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்த காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதால், பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பக்ரீத் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அனைத்து மசூதிகளிலும் தொழுகை நடத்தப்பட்டது. இங்கு வந்து நிலைமையை பார்வையிட ராகுல்காந்திக்கு விமானம்  அனுப்ப தயார் என்று கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள ராகுல்காந்தி மக்கள் மற்றும் முக்கிய தலைவர்களை சந்திப்பதற்கான சுதந்திரத்தை ஏற்படுத்தி தந்தால் காஷ்மீருக்கு வர தயார் என்று கூறியுள்ளார்.

அன்புள்ள ஆளுநர் மாலிக், எதிர்க்கட்சித் தலைவர்களின் குழு  ஜம்மு காஷ்மீர்  மற்றும் லடாக் வருகைக்கான உங்கள் அன்பான அழைப்பின் பேரில் நான்  அவர்களை  அழைத்துச் செல்வேன். எங்களுக்கு விமானம் தேவையில்லை,  ஆனால் மக்களை பிரதான தலைவர்கள் மற்றும் எங்கள் தொண்டர்கள்  அங்கு சந்திக்க  சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் என கூறி உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் 2-வது முறையாக காங்கிரஸ் கட்சி தலைவராகிறார் ராகுல்காந்தி?
ராகுல்காந்தி மீண்டும் 2-வது முறையாக காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
2. பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது - ராகுல்காந்தி
பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
3. என்.ஆர்.சி., என்.பி.ஆர். என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் - ராகுல் காந்தி
என்.ஆர்.சி., என்.பி.ஆர். என்பது ஏழை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4. “இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி சீரழித்துவிட்டார்” - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சீரழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
5. ராகுல் காந்தியின் சர்ச்சை கருத்தால் நாடாளுமன்றத்தில் பா.ஜனதா பெண் எம்.பி.க்கள் கடும் அமளி - இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ராகுல் காந்தியின் சர்ச்சை கருத்தால் நாடாளுமன்றத்தில் பா.ஜனதா பெண் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.