தேசிய செய்திகள்

சினிமா ஸ்டைலில் ஒரு நிஜ காட்சி... துப்பாக்கி சூட்டில் நக்சலைட் தங்கையை நேருக்குநேர் சந்தித்த போலீஸ் அண்ணன் + "||" + When a policeman came face-to-face with Naxal sister during encounter in Sukma

சினிமா ஸ்டைலில் ஒரு நிஜ காட்சி... துப்பாக்கி சூட்டில் நக்சலைட் தங்கையை நேருக்குநேர் சந்தித்த போலீஸ் அண்ணன்

சினிமா ஸ்டைலில் ஒரு நிஜ காட்சி... துப்பாக்கி சூட்டில் நக்சலைட் தங்கையை நேருக்குநேர் சந்தித்த போலீஸ் அண்ணன்
துப்பாக்கி சூட்டின் போது நக்சலைட் தங்கையை நேருக்குநேர் சந்தித்துள்ளார் போலீஸ் அண்ணன்.
சுக்மா:

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா பகுதியைச் சேர்ந்தவர் வெட்டி ராமா. இவர் போலீசாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், அப்பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

அப்போது ராமாவுக்கு எதிராக நின்ற மாவோயிஸ்டுகளுள், ஒரு  மாவோயிஸ்டாக அவரது தங்கை வெட்டி கன்னியும் நின்றுள்ளார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இதில் வெட்டி கன்னி எப்படியோ தப்பித்துவிட்டார். வெட்டி ராமா 2008-ம்  ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். இது குறித்து வெட்டி ராமா  கூறுகையில்,

‘நாங்கள் இருவருமே மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள்தான். ஆனால், மனமாற்றத்தால் சில காலம் கழித்து  நான் ஆயுதத்துடன் சரண் அடைந்து போலீசாக மாறிவிட்டேன்.

என் தங்கை கன்னியை நான் பலமுறை திரும்ப வந்துவிடுமாறு கடிதம் எழுதி அனுப்பினேன். ஆனால், இன்னும் வந்தபாடில்லை. தொடர்ந்து மாவோயிஸ்டாக தன் வாழ்க்கையை போராட்டமாகவே நடத்திக் கொண்டிருக்கிறாள்.

என் எதிரில் நின்று ஒரு மாவோயிஸ்டாக செயல்பட்டபோது எனக்கு கடினமாகவே இருந்தது. இது மிகுந்த மனவேதனையாக உள்ளது’ என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
2. கடன் தொல்லையால் விபரீத முடிவு: மனைவி, மகன் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்ற தொழில் அதிபர் - தானும் தற்கொலை செய்த பரிதாபம்
கர்நாடக மாநிலத்தில் கடன் தொல்லையால் மனைவி, மகன் உள்பட 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
3. காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு; பிறந்து 10 நாட்களேயான குழந்தை உயிரிழப்பு
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பிறந்து 10 நாட்களேயான குழந்தை உயிரிழந்தது.
4. மாலியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 100 பேர் சாவு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் அடிக்கடி பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
5. ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.