மாநில செய்திகள்

காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை + "||" + For people living in the coastal areas of Cauvery Tamil Nadu flood warning

காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி கரையோரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
சென்னை

கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை தாண்டியது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. இதற்கிடையே, காவிரி கரையோரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. 

இதை தொடர்ந்து  காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு  தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில்  காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.

காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது. காவிரி ஆறு அருகே செல்பி, புகைப்படங்கள் எடுக்க வேண்டாம்.  

108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உரிய நடவடிக்கைகளை எடுக்க 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை குழுவும் தயார் நிலையில் இருக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக அரசை விமர்சித்த வழக்கில், விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் கிருஷ்ணகிரி கோர்ட்டு உத்தரவு
தமிழக அரசை விமர்சித்த வழக்கில் விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என கிருஷ்ணகிரி கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.
2. தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மானியத்தை பெற முடியவில்லை - மத்திய மந்திரி தகவல்
தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மானியத்தை பெற முடியவில்லை என மத்திய மந்திரி தகவல் தெரிவித்தார்.
3. காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே. சின்ஹா நியமனம்; தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு
காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே. சின்ஹா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
4. தமிழக அரசு விரைவு பேருந்தில் இந்தி வாசகம் இருந்ததால் சர்ச்சை நீக்கிவிட்டதாக போக்குவரத்து துறை அறிவிப்பு
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் இந்தி வாசகம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வாசகத்தை நீக்கிவிட்டதாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
5. தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.