தேசிய செய்திகள்

கர்நாடகாவின் கபினி ஆற்றில் இருந்து அதிக நீர் திறக்க வாய்ப்பு; மத்திய ஜலசக்தி துறை எச்சரிக்கை + "||" + Centre warns of opening more water from Kabini River

கர்நாடகாவின் கபினி ஆற்றில் இருந்து அதிக நீர் திறக்க வாய்ப்பு; மத்திய ஜலசக்தி துறை எச்சரிக்கை

கர்நாடகாவின் கபினி ஆற்றில் இருந்து அதிக நீர் திறக்க வாய்ப்பு; மத்திய ஜலசக்தி துறை எச்சரிக்கை
கர்நாடகாவின் கபினி ஆற்றில் இருந்து அதிக நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது என மத்திய ஜலசக்தி துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
புதுடெல்லி,

கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  இதனால் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை தாண்டியது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இதை தொடர்ந்து  காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு  தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.  அதில்  காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.  காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது. காவிரி ஆறு அருகே செல்பி, புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்து உள்ளது.

இந்த நிலையில், மத்திய ஜலசக்தி துறை விடுத்துள்ள செய்தியில், கபினி நீர்பிடிப்பு பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும்.  இதனை தொடர்ந்து கர்நாடகாவின் கபினி ஆற்றில் இருந்து அதிக நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.  இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் 5 முதல் 6 டி.எம்.சி. வரை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும்.  இதனை தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை
கேரளாவில் கனமழையை முன்னிட்டு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
2. மும்பையில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு
மும்பையில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
3. வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை டீன் செல்வி எச்சரிக்கை
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. அரியலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
அரியலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்தார்.
5. தஞ்சை எம்.கே. மூப்பனார் சாலையில் மோட்டார் சைக்கிளில் அடிக்கடி அதிவேகத்தில் செல்லும் வாலிபர்கள் போலீசார் எச்சரிக்கை
தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அடிக்கடி அதிவேகத்தில் சென்று வருகிறார்கள். இனிமேல் இவ்வாறு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.