கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட் 2-வது தகுதி சுற்று போட்டி: திண்டுக்கல் டிராகன்ஸ் 175 ரன்கள் குவிப்பு + "||" + TNPL Cricket 2nd qualifier Dindigul Dragons accumulated 175 runs

டி.என்.பி.எல். கிரிக்கெட் 2-வது தகுதி சுற்று போட்டி: திண்டுக்கல் டிராகன்ஸ் 175 ரன்கள் குவிப்பு

டி.என்.பி.எல். கிரிக்கெட் 2-வது தகுதி சுற்று போட்டி: திண்டுக்கல் டிராகன்ஸ் 175 ரன்கள் குவிப்பு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
நத்தம், 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், மதுரை பாந்தர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது தகுதி சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்தனர். இதில் அரைசதம் அடித்த ஜெகதீசன் 50 ரன்களில் கேட்ச் ஆனார்.

அதற்கு பின் விவேக் 1 ரன்னிலும், அரைசதம் அடித்த ஹரி நிஷாந்த் 51 ரன்களிலும், அதிரடியாக ஆடிய சதுர்வேத் 35 ரன்களிலும், சுமந்த் ஜெயின் ரன் எதுவும் எடுக்காமலும், அதிரடி காட்டிய முகமது 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது. கடைசியில் ஆதித்யா அருண் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார்.


மதுரை பாந்தர்ஸ் அணியில் கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டுகளும் , ரஹில் ஷா, அபிஷேக் தன்வார், லோகேஷ் ராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும்  வீழ்த்தினர்.

இதனையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்க உள்ளது.