மாநில செய்திகள்

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசனம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த் + "||" + Kanchipuram: Actor Rajinikanth The darshan did athivarathar

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசனம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த்

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசனம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலிலுள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதரின் திருவுருவம் நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை நீரிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிப்பது வழக்கம்.


அதன்படி ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து வரதராஜ பெருமாள் கோவிலின் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக அத்திவரதர் வைக்கப்பட்டார்.

குளத்திலிருந்து எடுக்கப்படும் அத்திவரதர் மொத்தம் 48 நாட்கள் பக்தர்களுக்குத் தரிசனம் தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 24 நாட்கள் சயன திருக்கோலத்திலும் 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சயன திருக்கோலத்திலேயே 31 நாட்கள் காட்சியளித்த அத்திவரதர், இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் நின்ற திருக்கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

அத்திவரதரை நிரந்தரமாக தரிசனத்திற்கு வைக்க வேண்டும், கூடுதலாக 48 நாட்கள் தரிசனத்திற்கு வைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதரின் திருவுருவம் மீண்டும் அனந்தசரஸ் குளத்தின் நீருக்குள் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னைய்யா நேற்று அறிவித்தார்.

திருவுருவம் குளத்திற்குள் வைக்கப்படும்போது கோவிலின் அர்ச்சகர்கள், ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் கோவிலுக்குள் அனுமதியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதாவுடன் சேர்ந்து அத்திவரதரை இன்று தரிசனம் செய்தார்.

வருகின்ற 16-ந் தேதி வரை மட்டும் அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால், நாட்கள் நெருங்க நெருங்க லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். வருகின்ற 17-ந் தேதி அன்று வேத மந்திரங்கள் முழங்க கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ளே மீண்டும் அத்திவரதர் வைக்கப்படுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. அத்திவரதரை தரிசிக்க சென்ற போது தடுப்பு சுவரில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது ; தந்தை-மகன் பரிதாப சாவு
அத்திவரதரை தரிசிக்க சென்ற போது தடுப்பு சுவரில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தந்தை-மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2. அத்திவரதர் வைபவம்: காஞ்சீபுரம் நகர பள்ளி - கல்லூரிகளுக்கு 13, 14, 16 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை
அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு காஞ்சீபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு 13, 14, 16 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. 35வது நாள்: வெந்தய நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் அத்திவரதர் காட்சி
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருவிழாவின் 35வது நாளான இன்று அத்திவரதர் வெந்தய நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
4. 33வது நாள் : கரும்பச்சை வண்ண பட்டு அலங்காரத்தில் நின்ற கோலத்தில் அத்திவரதர்...
நின்ற கோலத்தின் இரண்டாவது நாளான இன்று, கரும்பச்சை வண்ண பட்டு அலங்காரத்தில் அத்திவரதர் காட்சி அளித்து வருகிறார்.
5. காஞ்சீபுரத்தில் இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி
காஞ்சீபுரத்தில் இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.