தேசிய செய்திகள்

முன்னாள் வெளியுறவு மந்திரி: சுஷ்மா சுவராஜுக்கு மத்திய மந்திரிசபை இரங்கல் + "||" + Former Foreign Minister: Union Cabinet's condolences to Sushma Swaraj

முன்னாள் வெளியுறவு மந்திரி: சுஷ்மா சுவராஜுக்கு மத்திய மந்திரிசபை இரங்கல்

முன்னாள் வெளியுறவு மந்திரி: சுஷ்மா சுவராஜுக்கு மத்திய மந்திரிசபை இரங்கல்
முன்னாள் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு மத்திய மந்திரிசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி,

முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் (வயது 67), மாரடைப்பால் கடந்த 6-ந்தேதி மரணம் அடைந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அந்த தீர்மானத்தில், “சுஷ்மா சுவராஜ் ஒரு தலைசிறந்த நிர்வாகி; வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவிக்கரம் நீட்டி, அவர்களின் இதயங்களை வென்றவர். இதன் காரணமாக 2017-ம் ஆண்டு அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பத்திரிகை அவரை இந்தியாவின் சிறந்த நேசிப்புக்குரிய அரசியல்வாதி என அறிவித்து கொண்டாடியது” என கூறப்பட்டுள்ளது.

அவரது மறைவால், நாடு ஒரு தனிச்சிறப்பான தலைவரை, தலைசிறந்த நாடாளுமன்ற வாதியை இழந்து விட்டது எனவும் இரங்கல் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது.