தேசிய செய்திகள்

காஷ்மீர் பிரச்சினையில் இருவேறு கருத்துகள்: காங்கிரஸ் விரக்தியில் இருக்கிறது - மத்திய மந்திரி குற்றச்சாட்டு + "||" + Two views on Kashmir issue: Congress is in despair - Central minister alleges

காஷ்மீர் பிரச்சினையில் இருவேறு கருத்துகள்: காங்கிரஸ் விரக்தியில் இருக்கிறது - மத்திய மந்திரி குற்றச்சாட்டு

காஷ்மீர் பிரச்சினையில் இருவேறு கருத்துகள்: காங்கிரஸ் விரக்தியில் இருக்கிறது - மத்திய மந்திரி குற்றச்சாட்டு
காஷ்மீர் பிரச்சினையில் இருவேறு கருத்துகள் தெரிவித்து வருவதால், காங்கிரஸ் விரக்தியில் இருக்கிறது என மத்திய மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து பற்றி காங்கிரஸ் தலைவர்கள் வெவ்வேறு குரலில் பேசி வருகிறார்கள். கரன்சிங், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, மிலிந்த் தியோரா, ஆர்.பி.என்.சிங் ஆகியோர் ஆதரிக்கிறார்கள். ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர் போன்றவர்கள் எதிர்க்கிறார்கள். காங்கிரஸ், பெரும் குழப்பத்தில் இருக்கிறது. எப்போதும் தெளிவான நிலைப்பாடு எடுத்தது இல்லை.


விரக்தி, ஏமாற்றம் மற்றும் இலக்கு இல்லாத அரசியலில் காங்கிரஸ் இருக்கிறது. இதுவரை மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும் என்பதால், 370-வது பிரிவு நீக்கத்தை காஷ்மீர் மக்கள் வரவேற்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடினர். ஆனால், ப.சிதம்பரம், இதை மதப்பிரச்சினை ஆக்க முயற்சிக்கிறார். இது மலிவான அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரம் குறித்து டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசியதற்கு ஓவைசி எதிர்ப்பு
காஷ்மீர் விவகாரம் குறித்து டிரம்பிடம் பிரதமர் மோடி பேசியதற்கு ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
2. காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் முடிவை ரஜினிகாந்த் வரவேற்றது வருத்தமளிக்கிறது - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் முடிவை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றது வருத்தமளிக்கிறது என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
3. சர்வதேச சமுதாயம் காஷ்மீரை ஆதரிக்க வேண்டும் - இம்ரான்கான் கருத்து
சர்வதேச சமுதாயம் காஷ்மீரை ஆதரிக்க வேண்டும் என இம்ரான்கான் கருத்து தெரிவித்துள்ளார்.
4. காஷ்மீர் பிரச்சினை, சுதந்திர தின விழா: புதுச்சேரி, தமிழகத்தில் போலீஸ் உஷார்
காஷ்மீர் பிரச்சினை மற்றும் சுதந்திரதின விழாவையொட்டி புதுச்சேரி, தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
5. காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தானுடனான இருதரப்பு பிரச்சினை - வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தானுடனான இருதரப்பு பிரச்சினை என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவிடம் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.