தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: அக்டோபரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு + "||" + J-K to host 3-day global investors summit in Srinagar from October 12

ஜம்மு காஷ்மீர்: அக்டோபரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு

ஜம்மு காஷ்மீர்: அக்டோபரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு
ஜம்மு காஷ்மீரில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், அக்டோபரில் 12 ஆம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.  ஜம்மு-காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு அந்தஸ்து தடையாக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 இந்த சூழலில், ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, முதலீடுகளை பெற வரும் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த மாநாடு, ஜம்மு-காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்அத்துடன், ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களுக்கு உள்ள சந்தேகங்கள், அச்சத்தை போக்குவதற்கும் உதவும் என்று ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலர் (தொழிற்சாலைகள்) நவீன் சவுத்ரி  சவுத்ரி தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு தொழிலதிபர்கள், தொழிற்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உள்பட 2,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. மூத்த மத்திய அமைச்சர்களும், உயரதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான முழு ஆதரவையும் அளிப்பதாக மத்திய உள்துறை உள்பட பல்வேறு மத்திய அமைச்சகங்களும் உறுதியளித்துள்ளன.