தேசிய செய்திகள்

கேரளா; மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை + "||" + Red alert issued in districts of Malappuram and Kozhikode, a

கேரளா; மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை

கேரளா; மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில்  கனமழை பெய்யும் என எச்சரிக்கை
கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், அங்கு பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களுக்கு பலியானோர் எண்ணிக்கை 92 ஆக  உயர்ந்துள்ளது. 2.26  லட்சம் மக்கள் 1,239 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், கேரளாவில் உள்ள மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, திரிசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர், கசர்கோட் ஆகிய இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் 2 பேர் கைது
பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. கேரளாவில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு - 31 பேரை காணவில்லை
கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது. மேலும் 31 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. வெள்ள பாதிப்பில் இருந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் கேரளா
வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
4. கேரளாவில் மழைக்கு பலி 95 ஆக உயர்வு - இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்க உத்தரவு
கேரளாவில் மழைக்கு பலி எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்க முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
5. கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்
கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.