தேசிய செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு + "||" + Multi-layered security arrangement in Delhi for Independence-Day celebrations

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாட்டின் 73-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்ற உள்ள டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து பதற்ற சூழல் நிலவுவதால் இம்முறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  காஷ்மீரிலும் பாகிஸ்தானை ஒட்டிய எல்லைப்பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

 மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், திரையரங்குள் என மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரிலும் சுதந்திர தினம் கோலகலமாக கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 


தொடர்புடைய செய்திகள்

1. சுவர் ஏறிகுதித்து வீட்டிற்குள் சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தது
டெல்லியில் சுவர் ஏறிகுதித்து வீட்டிற்கு சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை கைது செய்துள்ளது.
2. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரம் வீட்டிற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், அவர் இல்லாததால் திரும்பினர்
ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.
3. அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு - இம்ரான்கான் மீது மறைமுக குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
4. வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்: ஜி-7 மாநாட்டிலும் பங்கேற்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 22-ந்தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஜி-7 மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.
5. டெல்லியில், யமுனா நதி அபாய நிலையை எட்டியது
டெல்லியில் ஓடும் யமுனா நதி அபாய நிலையை எட்டியுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.