உலக செய்திகள்

ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம் + "||" + Flights departing Hong Kong airport after protest chaos

ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்

ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்
போராட்டம் தணிந்ததால், ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஹாங்காங்,

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 10-வது வாரத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது.

ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.

இந்த நிலையில்,  இன்று அதிகாலை விமான நிலையத்தில் இருந்து போராட்டக்காரர்கள் பெரும்பாலானோர் சென்றனர். இதையடுத்து, ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. நள்ளிரவில் இருந்து 12-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட்டு சென்றதாக விமான நிலையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து புறப்பட இருக்கும் விமானங்களின் அட்டவணைப்பட்டியலும் வெளியிடப்பட்டு இருந்தது.  

விமான நிலையத்த்தில் சிறிதளவு போராட்டக்காரர்கள் மட்டுமே இருப்பதாக ஏ.எப்.பி செய்தியாளர் தெரிவித்தார். விமான நிலையத்தின் செக் இன் பகுதி வழக்கம் போல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், போராட்டக்காரகள் மீண்டும் விமான நிலையத்தை முற்றுகையிடுவார்களா? என்பது தெரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. விமான நிலையத்தில் திரண்ட ஹாங்காங் போராட்டக்காரர்கள் - 3 நாட்கள் தங்கியிருந்து போராட முடிவு
சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக ஹாங்காங் போராட்டக்காரர்கள் விமான நிலையத்தில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
2. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட் டதை தொடர்ந்து கோவை விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
3. ஹாங்காங் போராட்டத்தால் விமான சேவை முடக்கம் - 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன
ஹாங்காங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டத்தால் விமான சேவை முடங்கியது. 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
4. 6 விமான நிலையங்கள் தனியார் மயமாகின்றன - மத்திய அரசு தகவல்
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டம் உள்ளதா? கொல்கத்தா விமான நிலையம் தனியாரிடம் ஒப்படைக்கப்படுமா? போன்ற கேள்விகளை எழுப்பினார்.
5. முக்கிய பகுதிகளை சரியாக பராமரிக்கவில்லை: சென்னை விமான நிலைய இயக்குனருக்கு டைரக்டர் ஜெனரல் நோட்டீஸ்
பயணிகள் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலக அதிகாரிகள் சென்னை உள்பட நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களை ஆய்வு செய்தனர்.