மாநில செய்திகள்

முதலமைச்சர் நீலகிரிக்கு செல்லாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் -மு.க.ஸ்டாலின் + "||" + CM Regarding Nilgiris not going Just ask him MK Stalin

முதலமைச்சர் நீலகிரிக்கு செல்லாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் நீலகிரிக்கு செல்லாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் நீலகிரிக்கு செல்லாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை

கேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திமுக சார்பில்  நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நேற்று சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய நிவாரணப்பொருட்களும், இன்று சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 35  லட்சம் ரூபாய் மதிப்புடைய நிவாரண பொருட்களும், சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய நிவாரண பொருட்களும்,  சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 15 லட்ச ரூபாய்கான நிவாரண  பொருட்கள் கேரளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. லாரிகள் மூலம்  நிவாரண பொருட்கள் இன்று கேரளாவுக்கு சென்றடையும். கேரளா அருகிலுள்ள ஈரோடு, கோவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரண  பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்படும் என்றார்.

முதல்வர் இன்னமும் மழையால் பாதித்த நிலகிரிக்கு ஆய்வுக்கு  சொல்லவில்லையே என்ற கேள்விக்கு, இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் கேளுங்கள். அமெரிக்கா, லண்டன் போவதற்கான முயற்சியெல்லாம்  செய்து கொண்டிருக்கிறார். ஒருவேளை அந்த ஏற்பாட்டில் இருப்பார். எனவே  இதையெல்லாம் பார்க்க அவருக்கு நேரம் இருக்காது எனக் கருதுகிறேன். இன்று ஆளுங்கட்சி செயல்படாமல் இருக்கும் நிலையில் ஒரு அளவுக்கு செயல்பட  திமுகதான் துணையிருக்கிறது. இதுதான் இன்றைய உண்மை நிலை. 

வேலூரில் ஏசி சண்முகம் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்கிறார்களே? என்ற கேள்விக்கு  அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை, எங்கள் வெற்றிக்கு நாங்கள்தான் காரணம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. "திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை" -ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு கே.எஸ்.அழகிரி பேட்டி
திமுக தலைவர் ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு திமுக -காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என கே.எஸ்.அழகிரி கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை