மாநில செய்திகள்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை + "||" + Chief Minister Palanisamy's advice on flood impacts in Coimbatore and Nilgiris districts

கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை

கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கடும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள், அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தென்மேற்கு பருவமழையால், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட சேத மதிப்பீடு தயார் செய்யப்பட்டு,  மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி, நிதி உதவி கோருவது தொடர்பாகவும், விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.