தேசிய செய்திகள்

பத்திரிகையாளர் மீது தாக்குதல்; பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது புகார் + "||" + Priyanka's aide booked for assaulting, threatening journalist

பத்திரிகையாளர் மீது தாக்குதல்; பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது புகார்

பத்திரிகையாளர் மீது தாக்குதல்; பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது புகார்
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது பத்திரிகையாளர் ஒருவர் தாக்குதல் புகார் கொடுத்துள்ளார்.
சோன்பத்ரா,

உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்திற்கு காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று சென்றார்.  கடந்த மாதம் நிலத்தகராறில் சுட்டு கொல்லப்பட்ட 10 பழங்குடியினரின் குடும்பத்தினை சந்தித்து ஆறுதல் கூற அம்பா கிராமத்திற்கு சென்றபொழுது, பத்திரிகையாளர் நிதீஷ் குமார் பாண்டே என்பவர் கேமிராவால் அதனை படம் பிடித்துள்ளார்.

இதனை பிரியங்காவின் தனி செயலாளர் சந்தீப் சிங் தடுத்துள்ளார்.  காஷ்மீர் விவகாரம் பற்றி பிரியங்காவிடம் கேள்வி எழுப்பிய நிதீஷை அவர் தள்ளி விட்டார்.  இதனால் இருவரிடையே வாக்குவாதம் எழுந்தது.  பத்திரிகையாளரை பா.ஜ.க. ஆதரவாளர் என கூறிய சிங், பணத்திற்காக காவி கட்சிக்கு ஆதரவாக கேள்விகள் கேட்கப்படுகின்றன என குற்றச்சாட்டு கூறினார்.

இதுபற்றிய வீடியோவை பதிவிட்டு, உத்தர பிரதேச முதல் மந்திரியின் ஊடக ஆலோசகர் மிருதுஞ்ஜெய் குமார் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பத்திரிகை சுதந்திரம் என கூறுபவர்கள், பிரியங்காவின் செயலாளர் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்டபொழுது எங்கே போனார்கள்? இதற்கு பிரியங்கா ஏன் எதுவும் கூறவில்லை? என தெரிவித்து உள்ளார்.

உத்தர பிரதேச அரசு பத்திரிகையாளர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் செயல்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரியங்கா காந்தி பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து
பிரியங்கா காந்தியின் பிறந்தநாளான நேற்று காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
2. பிரியங்கா காந்தி இல்ல பாதுகாப்பில் குளறுபடி - விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமித்ஷா தகவல்
பிரியங்கா காந்தியின் இல்லத்திற்குள் அத்துமீறி 5 பேர் நுழைந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
3. பாஜக அரசு விற்பனை செய்வதில் திறமையானது, உருவாக்குவதில் அல்ல - பிரியங்கா காந்தி
பாஜக அரசு விற்பனை செய்வதில் திறமையானது, உருவாக்குவதில் அல்ல என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
4. பிரியங்கா காந்தி இல்ல பாதுகாப்பில் குறைபாடு; அத்துமீறி சிலர் நுழைந்ததாக தகவல்
பிரியங்கா காந்திக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு இசட் பிளஸ் பாதுகாப்பு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
5. ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நாளை சந்திக்கின்றனர்
டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நாளை சந்திக்கின்றனர்.