மாநில செய்திகள்

சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, முதலீட்டாளர்களை சந்திக்கவே -அமைச்சர் உதயகுமார் + "||" + CM not going abroad for tourism, To meet investors Minister Udayakumar

சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, முதலீட்டாளர்களை சந்திக்கவே -அமைச்சர் உதயகுமார்

சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, முதலீட்டாளர்களை சந்திக்கவே -அமைச்சர் உதயகுமார்
சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக உலக முதலீட்டாளர்களை சந்திக்கவே வெளிநாடு செல்கிறார் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.
சென்னை,

அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி கரையோரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து அவ்வப்போது, பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து  வருகிறோம். தடுப்பணைகளின் நிலவரங்களையும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் நிவாரணப் பணிகளில் அரசு எல்லா உதவிகளையும் செய்த பிறகு தான் திமுகவினர் களத்திற்கு வந்தனர். முதலமைச்சர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார். சுற்றுலாவுக்காக முதல்வர் வெளிநாடு செல்லவில்லை. தமிழக மக்களின் வளர்ச்சிக்காக உலக முதலீட்டாளர்களை சந்திக்கவே வெளிநாடு செல்கிறார். அரசுக்கு நற்பெயர் வந்தவுடன் திமுகவினால் அதை ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. இது எதிர்க்கட்சி தலைவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. திமுக வெற்றியை மாற்றி அறிவிக்க முயற்சி நடைபெறுகிறது -மு.க.ஸ்டாலின் பேட்டி
திமுக வெற்றியை மாற்றி அறிவிக்க முயற்சி நடைபெறுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2. அனுமதியின்றி ஊர்வலம்: மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ உள்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு - சென்னை போலீசார் நடவடிக்கை
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஊர்வலம் நடத்தின. இதுதொடர்பாக அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ உள்பட 8 ஆயிரம் பேர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
3. அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயம்: உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தி.மு.க. முழு முயற்சி - மு.க.ஸ்டாலின் பேட்டி
உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தி.மு.க. முழு முயற்சி மேற்கொள்ளும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
4. முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான், யார் முட்டை என்று நான் சொல்லவில்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை; அதனை ஸ்டாலின் நிரப்பி விட்டார் -வைகோ
தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை. அதனை திமுக தலைவர் ஸ்டாலின் நிரப்பி விட்டார் என வைகோ தெரிவித்து உள்ளார்.