மாநில செய்திகள்

17-ம் தேதி ஆகம விதிகளின் படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் -மாவட்ட ஆட்சியர் பொன்னையா + "||" + On the 17th According to the rules of Agama The figurine will be placed in the Ananthasarus pond District Collector Ponniah

17-ம் தேதி ஆகம விதிகளின் படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் -மாவட்ட ஆட்சியர் பொன்னையா

17-ம் தேதி ஆகம விதிகளின் படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் -மாவட்ட ஆட்சியர் பொன்னையா
ஆகம விதிகளின் படி 17-ம் தேதி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் என காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அத்திவரதரை இதுவரை 89.75 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் .  பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால் தரிசனத்தை மாற்ற முடிவு  செய்யப்பட்டு உள்ளது.

அத்திவரதர் வைபவத்தில் நாளை 12 மணியுடன் விஐபி தரிசனம் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் விஐபி தரிசனம் கிடையாது. 17-ம் தேதி அன்று ஆறு கால பூஜைகள் நடத்தப்படும். ஆகம விதிகளின் படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார். அனைத்து துறையினரும் இரவு பகல் பாராமல்  சிறப்பாக, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர்.

பாதுகாப்பு பணியில் காவல்துறையின் பங்களிப்பு முக்கியமானது, போக்குவரத்து வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.