தேசிய செய்திகள்

மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தார் + "||" + Ex-Kolkata Mayor And Top Mamata Banerjee Aide Sovan Chatterjee Joins BJP

மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தார்

மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தார்
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்துள்ளார்.

மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா 2019 தேர்தலில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மம்தாவின் கோட்டையில் பா.ஜனதா 18 நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றது. இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவில் இணைவது தொடர்கதையாகி வருகிறது. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்துள்ளார்.

சோபன் சாட்டர்ஜி 2 முறை கொல்கத்தாவின் மேயராக இருந்துள்ளார். மம்தாவின் நம்பிக்கைக்குரியவரான அவர், சிறு வயது முதலே திரிணாமூல் காங்கிரசில் பணியாற்றி வந்தார். இப்போது அவர் பா.ஜனதாவிற்கு சென்றது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் 2021-ல் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதாவும், தக்க வைத்துக்கொள்ள திரிணாமுல் காங்கிரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.