தேசிய செய்திகள்

இன்னொரு மகாபாரதத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? ரஜினிக்கு ஐதராபாத் எம்.பி. கேள்வி + "||" + Asaduddin Owaisis Dig At Rajinikanth Who Praised PM Amit Shah

இன்னொரு மகாபாரதத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? ரஜினிக்கு ஐதராபாத் எம்.பி. கேள்வி

இன்னொரு மகாபாரதத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? ரஜினிக்கு ஐதராபாத் எம்.பி. கேள்வி
இன்னொரு மகாபாரதத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? என ரஜினிக்கு ஐதராபாத் எம்.பி. அசாதுதின் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை ஐதராபாத் எம்.பி. அசாதுதின் ஓவைசி கடுமையாக எதிர்க்கிறார்.

இவ்விவகாரத்தில் மத்திய அரசை ஆதரித்து ரஜினிகாந்த் பேசியதை விமர்சனம் செய்துள்ளார்.  

எம்.பி. அசாதுதின் ஓவைசி பேசுகையில், ``370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு, தமிழகத்தை சேர்ந்த நடிகர், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை கிருஷ்ணன், அர்ஜுனன் என கூறியுள்ளார். அப்படியென்றால் இந்த சூழ்நிலையில்  பாண்டவர்கள் யார்? கௌரவர்கள் யார்? நம் நாட்டுக்கு மற்றுமொரு மகாபாரதம் வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என கேள்வியை ரஜினிக்கு எழுப்பியுள்ளார். 

காஷ்மீர் மக்கள் மீதுயெல்லாம் மத்திய அரசுக்கு பாசம் கிடையாது. அவர்களுக்கு எல்லாம் காஷ்மீர் மண்ணின் மீதுதான் பாசமாகும்.  அவர்கள் அதிகாரத்தை விரும்புகிறார்கள் நீதியையோ, சேவையையோ விரும்பவில்லை. அரசு மீண்டும் தங்கள் ஆட்சியை தக்கவைத்து கொள்ளவே விரும்புகிறதே தவிர, யாரும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவில்லை என்பதை நான் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறேன் என மத்திய அரசையும் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
”தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்” என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
2. "கோ பேக் மோடி" டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தான் குழுக்கள்
கோ பேக் மோடி டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது.
3. சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை: எல்லைப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு..!
இன்று மோடி - சீன அதிபர் சந்திப்பில் எல்லைப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு உளளது.
4. மராட்டிய சட்டசபை தேர்தல் பிரதமர் மோடி 4 நாட்கள் பிரசாரம் 9 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்
சட்டசபை தேர்தலையொட்டி 4 நாட்கள் பிரசாரத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி 9 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
5. கடற்கரை கோவில் சிற்பங்களை சீன அதிபருக்கு விளக்கினார் பிரதமர் மோடி
மாமல்லபுரம் கடற்கரை கோவில் சிற்பங்களை சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி விளக்கினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...