தேசிய செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு எமோஜியாக அசோக சக்கர சின்னம் - டுவிட்டரில் வெளியீடு + "||" + Twitter launches Ashoka Chakra emoji for 73rd Independence day

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு எமோஜியாக அசோக சக்கர சின்னம் - டுவிட்டரில் வெளியீடு

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு எமோஜியாக அசோக சக்கர சின்னம் - டுவிட்டரில் வெளியீடு
சுதந்திர தினத்தை முன்னிட்டு அசோக சக்கர சின்னத்தை சிறப்பு எமோஜியாக டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,

அசோகச் சக்கரம் அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் 24 ஆரங்களை கொண்ட சக்கர வடிவ சின்னமாகும். இது பௌத்தர்களின் எட்டு ஆரங்களைக் கொண்ட தர்ம சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அசோகர் பயன்படுத்தியதால் இது அசோகச் சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. சாரநாத்தில் உள்ள சிங்க தலைகள் பதித்த அசோகத்தூணில் உள்ள இந்தச் சக்கரம், இந்திய தேசியக் கொடியில் மையப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.

நாளை ஆகஸ்டு 15-ம் தேதி, இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தை குறிக்கும் விதமாக, அசோக சக்கர சின்னத்தை எமோஜியாக டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த எமோஜி ஆகஸ்டு 18 ம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும். டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் தாங்கள் இடும் பதிவுகளில் இந்த எமோஜியை பயன்படுத்தி ஹேஷ்டேக்குகளை உருவாக்கலாம்.

கடந்த வருடங்களில் டுவிட்டர் நிறுவனம் இது போல செங்கோட்டை, தேசியக் கொடி ஆகிய சின்னங்களை எமோஜிக்களாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. எனது வாழ்நாளில் இதனை காணவே நான் காத்திருந்தேன்; சுஷ்மா சுவராஜின் இறுதி டுவிட்
எனது வாழ்நாளில் இதனை காணவே நான் காத்திருந்தேன் என சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் இறுதியாக தெரிவித்துள்ளார்.
2. சிறப்பு அந்தஸ்து ரத்து: டுவிட்டரில் டிரெண்டான காஷ்மீர் விவகாரம்
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட காஷ்மீர் விவகாரம் நேற்று டுவிட்டரில் டிரெண்டானது.
3. உலக அளவில், டுவிட்டரில் டிரெண்டிங் ஆன தமிழ் வாழ்க முழக்கம்
உலக அளவில் டுவிட்டரில் தமிழ் வாழ்க என்ற முழக்கம் டிரெண்ட் ஆகியுள்ளது.
4. நடிகர் அமிதாப் பச்சனின் 'டுவிட்டர்' ஹேக் செய்யப்பட்டுள்ளது
நடிகர் அமிதாப் பச்சனின் 'டுவிட்டரை' ஹேக்கர்கள் கைப்பற்றி உள்ளனர்.