தேசிய செய்திகள்

சிக்கிம் ஜனநாயக முன்னணியை சேர்ந்த மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் - ஆளும் கட்சியில் சேர்ந்தனர் + "||" + 2 more MLAs from Sikkim democratic front - Joined the ruling party

சிக்கிம் ஜனநாயக முன்னணியை சேர்ந்த மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் - ஆளும் கட்சியில் சேர்ந்தனர்

சிக்கிம் ஜனநாயக முன்னணியை சேர்ந்த மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் - ஆளும் கட்சியில் சேர்ந்தனர்
சிக்கிம் ஜனநாயக முன்னணியை சேர்ந்த மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சியில் இணைந்தனர்.
காங்டாக்,

சிக்கிம் மாநிலத்தில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி, சிக்கிம் ஜனநாயக முன்னணி. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தது. அக்கட்சிக்கு 13 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.

இவர்களில், 10 எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் டெல்லியில் பா.ஜனதாவில் இணைந்தனர். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அக்கட்சியை சேர்ந்த ஜி.டி.துங்கல், எம் பிரசாத் சர்மா ஆகிய எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஆளும் கட்சியான சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சாவில் சேர்ந்தனர்.


இதனால், முன்னாள் முதல்-மந்திரி பவன் குமார் சாம்லிங் மட்டுமே சிக்கிம் ஜனநாயக முன்னணியின் ஒரே எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத பா.ஜனதா, தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.