தேசிய செய்திகள்

டெல்லி சென்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி, காஷ்மீருக்கு திருப்பி அனுப்பப்பட்டார் + "||" + Former IAS who went to Delhi The officer was sent back to Kashmir

டெல்லி சென்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி, காஷ்மீருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்

டெல்லி சென்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி, காஷ்மீருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்
டெல்லி சென்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பேசல், காஷ்மீருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
ஸ்ரீநகர்,

கடந்த 2009-ம் ஆண்டு, சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர், காஷ்மீரை சேர்ந்த ஷா பேசல். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றிய இவர், கடந்த ஜனவரி மாதம் ராஜினாமா செய்தார். பின்னர், ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்க கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வருகிறார்.


இதற்கிடையே, ஷா பேசல், துருக்கி நாட்டுக்கு செல்வதற்காக நேற்று டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். அவரை அங்கு தடுத்து நிறுத்திய அதிகாரிகள், மற்றொரு விமானத்தில் காஷ்மீருக்கே திருப்பி அனுப்பினர்.

ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு வந்த ஷா பேசலை பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.