தேசிய செய்திகள்

“கேளிக்கைகள், பொருளாதார பிரச்சினையை தீர்க்காது” - மோடி மீது சீதாராம் யெச்சூரி தாக்கு + "||" + "Entertainment doesn't solve economic problems" - Sitharam Yechury attack on Modi

“கேளிக்கைகள், பொருளாதார பிரச்சினையை தீர்க்காது” - மோடி மீது சீதாராம் யெச்சூரி தாக்கு

“கேளிக்கைகள், பொருளாதார பிரச்சினையை தீர்க்காது” - மோடி மீது சீதாராம் யெச்சூரி தாக்கு
கேளிக்கைகள், பொருளாதார பிரச்சினையை தீர்க்காது என மோடிக்கு எதிராக சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

பிரதமர் மோடி பங்கேற்ற டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சி, ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. இந்நிலையில், இதை விமர்சிக்கும்வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.


அவர் கூறியிருப்பதாவது:-

மோடி அரசு 2014-ம் ஆண்டில் இருந்து ஏராளமான பொருளாதார பிரச்சினைகளை உருவாக்கி உள்ளது. ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் நடத்தும் வேடிக்கைகளும், கேளிக்கைகளும் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்காது. சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் பிரித்தாளும் செயல்களை தவிர, வேறு உருப்படியான திட்டங்கள் எதையும் இந்த அரசில் பார்க்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.