தேசிய செய்திகள்

முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் : பிரதமர் மோடி அறிவிப்பு + "||" + PM Narendra Modi in Independence Day speech says "Chief of Defence Staff will be created who will oversee the three forces"

முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் : பிரதமர் மோடி அறிவிப்பு

முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் : பிரதமர் மோடி அறிவிப்பு
தனித்தனி தலைவர்களின் கீழ் செயல்படும் முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
புதுடெல்லி, 

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்த பின் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- 

மக்களின் அமோக ஆதரவு மூலம் நாட்டில் மாற்றம் கொண்டு வர முடியும், 2019ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது . 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் படேலின் கனவு நனவாகி உள்ளது 

 2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன, நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம். காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளேன்.  இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமையும் பாதுகாப்பும் கிடைத்துள்ளது. . மக்கள் எனக்கு அளித்த வேலையை சிறப்பாக செய்து வருகிறேன். 

பிரச்சினைகளை உருவாக்குவதிலோ அதை இழுத்துக்கொண்டே செல்வதிலோ எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. புதிய அரசு ஆட்சி அமைத்து 70 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளது.    தேர்தலில் தோற்றவர்கள்  370 ரத்து குறித்து விமர்சித்து வருகின்றனர். 370 -உருவாக்கப்பட்ட போது தற்காலிகம் என குறிப்பிடப்பட்டது ஏன்?

நாட்டின் முன்னேற்றத்திற்காக இன்னும் பல புதிய முயற்சிகளை எடுக்கிறது அரசு.  வறுமையை ஒழித்து விட்டால் மக்கள் அரசின் உதவியை எதிர்பார்க்க வேண்டியதில்லை.மக்களின் கனவுகளை நிறைவேற்ற இந்த அரசு தொடர்ந்து பாடுபடும்.  தண்ணீர் பஞ்சத்தை போக்கி, வீட்டிற்கே தண்ணீர் கொண்டு செல்ல ஜல்ஜீவன் திட்டம் அறிமுகம். 

 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை அடுத்த  4 ஆண்டுகளில் செய்வோம்.   விவசாயம், தண்ணீர் பிரச்சினைகளை  தீர்க்க ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வியாதி போல் நாடு முழுவதும் பரவியிருக்கும் ஊழலை ஒழிபோம். மக்கள் தொகை பெருக்கம் வருங்கால தலைமுறைகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும். சிறிய குடும்பம் என்ற கொள்கையை பின்பற்றுபவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறார்கள். தேசப்பற்றின் ஒரு வடிவமாகவும் இது திகழ்கிறது. 

ஊழல் என்னும் கொடிய நோயை அகற்ற அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது இந்தியாவில் ஊழல் என்பதே இருக்க கூடாது. கடந்த 5 ஆண்டுகளாக வணிகர்களின் நிம்மதியான வாழ்விற்கு, தடையாக இருந்த பல்வேறு சட்டங்கள் அகற்றப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ 100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாலை, ரயில் நிலையங்களை அரசு  நவீனப்படுத்தி வருகிறது, சாமானிய மக்களின் ஆதரவு மற்றும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

தனித்தனி தலைவர்களின் கீழ் செயல்படும் முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். Chief of Defence Staff  என்ற பதவியில் புதிய அதிகாரி நியமிக்கப்படுவார். நாட்டின் முப்படைகளையும் ஒருங்கிணைக்கவும் சீரமைக்கவும் ஒரே தலைமை.  முப்படைக்கும் ஒரே தலைமை நியமிக்கப்படுவதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு படைகள் ஒருங்கிணைக்கப்படும். ஒரே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிகை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை சட்டம்: எதிர்க்கட்சிகள் மக்களை போராட தூண்டிவிடுகின்றன - பிரதமர் மோடி
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களை தூண்டிவிடுகின்றன என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
2. தடுமாறி கீழே விழ முயன்ற பிரதமர் மோடி; சுதாரித்து உதவிய பாதுகாப்பு வீரர்கள்!
தடுமாறி கீழே விழ முயன்ற பிரதமர் மோடியை பாதுகாப்பு வீரர்கள் உடனடியாக சுதாரித்து உதவி செய்தனர்.
3. இங்கிலாந்து தேர்தலில் வெற்றி; போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இங்கிலாந்து தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வென்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
4. நாட்டின் நலனுக்காக சில முடிவுகளை எடுப்பதை காங்கிரஸ் தவிர்த்தது - பிரதமர் மோடி
நாட்டின் நலனுக்காக கடினமான சில முடிவுகளை எடுப்பதை காங்கிரஸ் கட்சி தவிர்த்தது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5. ‘பிரதமர் மோடிக்கு மாற்று, ராகுல் காந்தி மட்டுமே’அசோக் கெலாட் சொல்கிறார்
‘பிரதமர் மோடிக்கு மாற்று, ராகுல் காந்தி மட்டுமே’ என ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறினார்.