மாநில செய்திகள்

73-வது சுதந்திர தினம் : சென்னையில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி கொண்டாட்டம் + "||" + 73rd Independence Day: In various places in Chennai Flag celebration

73-வது சுதந்திர தினம் : சென்னையில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி கொண்டாட்டம்

73-வது சுதந்திர தினம் : சென்னையில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி கொண்டாட்டம்
73-வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
சென்னை

* சென்னை தியாகராயநகரில் தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

* சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சரக்கு மற்றும்  சேவை, மத்திய கலால்வரி  துறை அலுவலகத்தில் சென்னை வடக்கு மண்டல  முதன்மை ஆணையர் ஹேமாவதி மூவர்ணக்கொடி ஏற்றிவைத்தார்

* சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சீதா லெட்சுமி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

* சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே திடலில், தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் பி.கே.மிஸ்ரா, தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆர்.பி.எஃப். வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

 தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மிஸ்ரா  பேசும் போது கடந்த நிதியாண்டை காட்டிலும், இந்தாண்டு ஜூலை வரை தெற்கு ரயில்வேயில் பயணிகள் சேவையின் மூலம் வரும் வருவாய் 8.62 சதவீதம் உயர்ந்துள்ளது என கூறினார்.

* சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் சென்னை மண்டல சுங்கத்துறை முதன்மை தலைமை ஆணையர் அஜித்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுங்கத்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

* சென்னை ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆயுதப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

* சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் அதன் தலைவர் ரவீந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் படை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

* தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக் கொடி ஏற்றி வைத்தார். கட்சி நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

* சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா தேசிய கொடி ஏற்றி வைத்தார்

* சென்னை பூங்கா நகரில் உள்ள சென்னை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் மகேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

* சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் தேசியக் கொடியேற்றி வைத்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அரசு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் சாரண, சாரணீயரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

*  சுதந்திர தின விழாவையொட்டி தேசிய கொடியை தனது கட்சி அலுவலகத்தில் ஏற்றினார் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா.

தொடர்புடைய செய்திகள்

1. சுகாதாரம், சுற்றுச்சூழல், அணிவகுப்பு - சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு
சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை பாராட்டி சுதந்திர தினவிழாவில் ரொக்கப் பரிசு, விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
2. சுதந்திர தினவிழாவில் பணியின் போது போலீசார் செல்போன் பயன்படுத்த கூடாது - சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
சுதந்திர தினவிழாவில் போலீசார் பணியில் இருக்கும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் கூறினார்.