தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் சத்யபால் மாலிக் + "||" + Malik hoists tricolour in first I-Day celebration in J-K after abrogation of special status

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் சத்யபால் மாலிக்

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் சத்யபால் மாலிக்
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
ஸ்ரீநகர், 

நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள உள்ள ஷெர் ஐ காஷ்மீர் மைதானத்தில் நடந்த விழாவில் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, நடைபெறும் சுதந்திர விழா கொண்டாட்டம் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. 

மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்த பின்பு,  துணை ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரின்  அணி வகுப்பு மரியாதையையும் ஆளுநர் சத்யபால் மாலிக் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, அங்குள்ள மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய சத்யபால் மாலிக்,   370 சட்டப்பிரிவு நீக்கம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வளர்ச்சிக்கு புதிய கதவை திறந்து விட்டுள்ளது. 

காஷ்மீர் மக்களின் அடையாளங்கள் பறிக்கப்படவோ, அழிக்கப்படவோ இல்லை என்பதை மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். அதே சமயம் இந்திய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு விதமான பிராந்தியங்களின் அடையாளங்கள் வளர வழிவகுக்கிறது” என்றார்.