மாநில செய்திகள்

46-வது நாள்: அத்திவரதரை தரிசிக்க விஐபி தரிசனம் நிறுத்தம் பொது தரிசனத்திற்கு மட்டும் அனுமதி + "||" + Day 46:   To see the athivarathar VIP dharsan stop; Allow only for public dharasan

46-வது நாள்: அத்திவரதரை தரிசிக்க விஐபி தரிசனம் நிறுத்தம் பொது தரிசனத்திற்கு மட்டும் அனுமதி

46-வது நாள்:  அத்திவரதரை தரிசிக்க விஐபி தரிசனம் நிறுத்தம் பொது தரிசனத்திற்கு மட்டும் அனுமதி
46-வது நாளான இன்று அத்திவரதரை தரிசிக்க விஐபி தரிசனம் பிற்பகல் 2 மணியுடன் நிறுத்தப்பட்டு உள்ளது. பொது தரிசனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கபட்டு உள்ளது.
சென்னை

அத்திவரதர் வைபவம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனர். 

46-வது நாளான இன்று அத்திவரதருக்கு பச்சை மற்றும் வெள்ளை நிற பட்டாலும், மலர்களால் ஆன ஆடையாலும் ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை முதல் காலை 11 மணி வரை 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் மேலும் லட்சக் கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இன்று பிற்பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோவில் வளாகத்துக்குள் உள்ளவர்கள் மாலை 5 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 மணிக்குப் பிறகு ஆடி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் அது நிறைவடைந்த பின் மாலை 7 மணிக்குப் பிறகு மீண்டும் தரிசனம் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எவ்வளவு பக்தர்கள் இருந்தாலும் அனைவரும் நள்ளிரவு வரையோ, அதிகாலை வரையோ தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வி.ஐ.பி. தரிசனவரிசையில் பிற்பகல் 2 மணியுடன் அனுமதி நிறுத்தபட்டு அதன் பிறகு வரிசையில் நிற்பவர்கள் மாலை 5 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 5 மணிக்குப் பிறகு வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் விஐபி-விவிஐபி பாஸ்களுடன் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் தண்ணீர் லாரிகள்-இன்று முதல் வேலைநிறுத்தம்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று (புதன்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.
2. அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்திற்கு ஒரு மாதம் போலீஸ் பாதுகாப்பு
அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் ஒரு மாதம் போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வன் தெரிவித்தார்.
3. 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் சயனநிலைக்கு சென்றார்
காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் சயனநிலைக்கு சென்றார்.
4. அத்திவரதர் சிலை வைக்கும் குளத்தை எந்த தண்ணீர் கொண்டு நிரப்ப வேண்டும்? அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
அத்திவரதர் சிலை வைக்கும் குளத்தை எந்த தண்ணீரை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. இன்று வருகை தரும் அனைத்து பக்தர்களும் அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு - ஆட்சியர் பொன்னையா பேட்டி
இன்று வருகை தரும் அனைத்து பக்தர்களும் அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்.