மாநில செய்திகள்

சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை மையம் + "||" + In the evening or night in Chennai Chances of thunderstorms Chennai Meteorological Center

சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை மையம்

சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை மையம்
சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை

சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்கிறது.

வட தமிழகத்தை பொறுத்தவரை வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. நேற்று நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் 7 செ,மீ., திருத்தணி, திருவாலங்காடு சோழவரத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளது, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழையும், வட தமிழகத்தில் லேசான மழையும் பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்புள்ளது.

தென் தமிழகப் பகுதியில் தென்மேற்கு திசையை நோக்கி மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால்  மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என கூறினார்.