தேசிய செய்திகள்

காஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்தியா பதிலடி + "||" + POONCH: Pakistan has violated ceasefire in KG sector; Indian Army retaliating.

காஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்தியா பதிலடி

காஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்தியா பதிலடி
காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
பூஞ்ச்

ஜம்மு  காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் கேஜி துறையில் பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு  நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து உள்ளது.

வடக்கு ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங்

கடந்த சில நாட்களாக, பாகிஸ்தானால் ஊடுருவல்களை தூண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இதுபோன்ற ஊடுருவல் முயற்சிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் ஆதரிக்கப்படுகிறது. இங்கு இந்திய இராணுவம் முற்றிலும் எச்சரிக்கையாக உள்ளது & இதுபோன்ற அனைத்து முயற்சிகளையும் எங்களால் தோல்வி அடைய செய்ய  முடிந்தது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பும் கிடையாது’ ஜம்மு காஷ்மீர் ஆளுநர் பேச்சு
இன்டர்நெட் சேவை, மொபைல் சேவையை நிறுத்தியது பள்ளத்தாக்கு பகுதியில் உயிர்களை காப்பாற்றுகிறது. '10 நாட்களில் எந்தஒரு உயிரிழப்பு சம்பவமும் கிடையாது’ என ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் கூறியுள்ளார்.
2. எதிர்க்கட்சி தலைவர்கள் வருகை என்ற தகவலால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ராணுவம் குவிப்பு
ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகத்தின் வேண்டுகோளையும் மீறி எதிர்க்கட்சி தலைவர்கள் அங்கு செல்லக்கூடும் எனத் தெரிகிறது. இதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் துணை ராணுவப்படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
3. காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாதி கிலானிக்கு இன்டர்நெட் சேவை; பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட்
காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாத தலைவர் சையத் கிலானிக்கு இன்டர்நெட் சேவை வழங்கிய விவகாரம் தொடர்பாக இரு பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
4. தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
ஜம்மு அருகே தாவி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இருவர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
5. காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த போலீஸ் கவனம் செலுத்துகிறது- டிஜிபி
காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்தவும், மக்களை தவறாக வழிநடத்த விடாதவகையிலும் காவல்துறை செயல்பட்டு வருகிறது என டிஜிபி கூறியுள்ளார்.