உலக செய்திகள்

பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை பாகிஸ்தானுக்கு ரஷ்யா அறிவுறுத்தல் + "||" + Russia asks Pakistan to bilaterally resolve Kashmir dispute with India

பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை பாகிஸ்தானுக்கு ரஷ்யா அறிவுறுத்தல்

பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை பாகிஸ்தானுக்கு ரஷ்யா அறிவுறுத்தல்
இந்தியாவுடனான பிரச்சினையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பாகிஸ்தானை ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.
மாஸ்கோ

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் நீக்கம், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதா நிறைவேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு  கொண்டு செல்லுமாறு ரஷ்யாவை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது.

இதுதொடர்பாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லவ்ரோவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இரு நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றத்தை தணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் தூதரக ரீதியில் இருதரப்பும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதைத் தவிர மாற்று வழி எதுவும் கிடையாது. சிம்லா மற்றும் லாகூர் ஒப்பந்தங்கள் அடிப்படையில் இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சினையில் மூன்றாவது நபர் தலையிட முடியாது என்றும் செர்கேய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் முடிவுகளை வரவேற்ற ஐநா பாதுகாப்பு அவையின் முதல் நிரந்தர உறுப்பு நாடு ரஷ்யா என்பது குறிப்பிடத்தக்கது.