மாநில செய்திகள்

சென்னையில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடிய திருநங்கைகள் + "||" + Tamil Nadu: Transgender community celebrates Independence Day in Chennai

சென்னையில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடிய திருநங்கைகள்

சென்னையில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடிய திருநங்கைகள்
சென்னையில் திருநங்கைகள் சார்பில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
சென்னை,

நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம் கோலாகலமுடன் இன்று கொண்டாடப்பட்டது.  தேசிய கொடியை ஏற்றி தலைவர்கள் உரிய மரியாதையை செலுத்தினர்.  நாட்டுப்பற்றை உணர்த்தும் வகையில் சிறுவர், சிறுமிகள், பள்ளி மற்றும் கல்லூரியில் பயில்வோர் மற்றும் பொதுமக்கள் தேசிய கொடிகளை தங்களது ஆடைகளில் அணிந்தபடி சென்றனர்.  அவர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதேபோன்று சென்னையில் தோழி என்ற திருநங்கைகளுக்கான காப்பகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.  இதன்பின்பு அவர்கள் இனிப்புகளை வழங்கியும், பல்வேறு கலாசார நடன நிகழ்ச்சிகள், மியூசிக் சேர் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.

இதுபற்றி திருநங்கை கலைமாமணி சுதா என்பவர் கூறும்பொழுது, இந்த வருடம் உண்மையில் நாங்கள் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறோம்.  எங்களது (திருநங்கை சமூகம்) சுதந்திரமும் அதிவிரைவில் கிடைக்கும் என உணருகிறோம்.  வேலைவாய்ப்புகளில் எங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது
திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
2. தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் 8 திருநங்கைகள், காவலாளியாக நியமனம்
தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 8 திருநங்கைகள் காவலாளியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
3. ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் 73,000 திருநங்கைகள் கைது
ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் 73,000 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.