தேசிய செய்திகள்

காஷ்மீர்,லடாக்கில் அமைதியான முறையில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிறைவு + "||" + IndependenceDay celebrations in all the districts of J&K and Ladakh concluded peacefully J&K Principal Secretary (Planning Commission) Rohit Kansal

காஷ்மீர்,லடாக்கில் அமைதியான முறையில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிறைவு

காஷ்மீர்,லடாக்கில் அமைதியான முறையில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிறைவு
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் அமைதியான முறையில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றதாக முதன்மைச் செயலாளர் ரோகித் கன்சால் தெரிவித்துள்ளார்.
ஜம்மு,

370 சட்டப்பிரிவுக்கு பின்னர் முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.   ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் ஐ காஷ்மீர் மைதானத்தில் நடந்த விழாவில் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். 

அப்போது பேசிய அவர், காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என்றார். அது மட்டுமல்லாமல், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வளர்ச்சிக்கான கதவுகள், திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்நிலையில்,  காஷ்மீர், லடாக்கில் அமைதியான முறையில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றதாக முதன்மைச் செயலாளர் ரோகித் கன்சால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் அமைதியான முறையில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றது.  ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று இரவு முதல் விமானங்கள் இயக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

லடாக் தொகுதி பாஜக எம்.பி ஜாம்யாங் சேரிங் நமங்யால் பாரம்பரிய உடை அணிந்து மக்களுடன் இணைந்து நடனம் ஆடினார். லடாக் மக்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும், மக்களுடன் இணைந்து பாரம்பரிய மேளத்தை இசைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...