மாநில செய்திகள்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பிரதமரின் தைரியமான முடிவு; ஆளுநர் பன்வாரிலால் பேச்சு + "||" + PM bold decision to remove Kashmir's special status; Governor Banwarilal

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பிரதமரின் தைரியமான முடிவு; ஆளுநர் பன்வாரிலால் பேச்சு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பிரதமரின் தைரியமான முடிவு; ஆளுநர் பன்வாரிலால் பேச்சு
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டது பிரதமர் மோடியின் தைரியமான முடிவு என ஆளுநர் பன்வாரிலால் பேசியுள்ளார்.
சென்னை,

சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து கொடுத்தார்.  இதில், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இதன்பின் ஆளுநர் பன்வாரிலால் பேசும்பொழுது, ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும்.  அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்.  இந்திய பொருளாதாரம் வேகமுடன் வளர்ந்து வருகிறது.  பிரதமரின் தலைமையில் புதிய இந்தியா உருவாகி வருகிறது என பேசினார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது பிரதமர் மோடியால் எடுக்கப்பட்ட தைரியமான முடிவு என்றும் அவர் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை