கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 126 ரன்கள் சேர்ப்பு + "||" + TNPL Cricket finalist Chepauk Super Gillies scored 126 runs

டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 126 ரன்கள் சேர்ப்பு

டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 126 ரன்கள் சேர்ப்பு
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
சென்னை, 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதனையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் கோபிநாத் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் கோபிநாத் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரைத்தொடர்ந்து கங்கா ஸ்ரீதர் ராஜூ 4 ரன்னிலும், விஜய் சங்கர் 1 ரன்னிலும் கேட்ச் ஆகினர். அதற்கு பின் கவுசிக் காந்தி 22 ரன்னிலும், சுஷில் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த சசிதேவ் மற்றும் முருகன் அஸ்வின் அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். இதில் பொறுப்பாக ஆடிய சசிதேவ் 44 ரன்களிலும், அடுத்து வந்த ஹரிஷ்குமார் 1 ரன்னிலும், சித்தார்த் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்துள்ளது. கடைசியில் முருகன் அஸ்வின் 28 ரன்னுடன் களத்தில் இருந்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் ஜெ.கவுசிக் மற்றும் அபினவ் 2 விக்கெட்டுகளும், ரோகித் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்க உள்ளது.