கிரிக்கெட்

சென்னையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை + "||" + Former India cricketer V.B. Chandrasekhar passes away

சென்னையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை

சென்னையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை
சென்னையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டார்.
அடையாறு, 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் (வயது 57). இவர் சென்னை மயிலாப்பூர் விஸ்வேஸ்வர்புரத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு சந்திரசேகர் வீட்டின் அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது வி.பி. சந்திரசேகர் அங்கு தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

தற்கொலை

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

இந்திய அணிக்காக...

இந்திய அணிக்காக 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 7 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 88 ரன்கள் எடுத்துள்ளார். அதிரடி பேட்ஸ்மேனான அவர் தமிழக அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 81 ஆட்டங்கள் ஆடி, 4,999 ரன்கள் குவித்துள்ளார். ஒரு ஆட்டத்தில் 56 பந்தில் சதம் அடித்ததும் அடங்கும். தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

மேலும், தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்து வந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணி பிளே-ஆப் சுற்றை எட்டியது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை செய்துகொண்ட வி.பி.சந்திரசேகருக்கு சவுமியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.