உலக செய்திகள்

ரஷியாவில் நடுவானில் பறந்தபோது தீ; வயலில் தரையிறங்கிய விமானம்233 பயணிகள் உயிர் தப்பினர் + "||" + Passengers injured in emergency landing after Russian jet hits birds

ரஷியாவில் நடுவானில் பறந்தபோது தீ; வயலில் தரையிறங்கிய விமானம்233 பயணிகள் உயிர் தப்பினர்

ரஷியாவில் நடுவானில் பறந்தபோது தீ; வயலில் தரையிறங்கிய விமானம்233 பயணிகள் உயிர் தப்பினர்
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏர்பஸ் ஏ321’ ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
மாஸ்கோ, 

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏர்பஸ் ஏ321’ ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 233 பேர் இருந்தனர்.

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது சில பறவைகள் விமானத்தின் 2 என்ஜின்களிலும் மோதின. இதனால் விமானத்தில் தீப்பிடித்தது. இதை அறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை விமானநிலையத்துக்கு திருப்பி அவசரமாக தரையிறக்க முடிவு செய்தனர்.

அதன்படி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துவிட்டு, விமானநிலையத்தை நோக்கி விமானம் வேகமாக சென்று கொண்டிருந்தது. ஆனால் அதற்குள் விமானத்தில் தீ மளமளவென பரவ தொடங்கியதால் விமான நிலையத்துக்கு முன் 1 கி.மீ. தொலைவில் உள்ள வயல்வெளியில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கரடுமுரடான பகுதியில் தரையிறங்கியதில் விமானம் பயங்கரமாக குலுங்கியது. இதனால் சிறுவர்கள் உள்பட 23 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் விமான நிலையத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள், மீட்பு குழுக்கள் மற்றும் ஆம்புலன்சுகள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டன. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை அவசரமாக தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.