மாநில செய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்து வருத்தம் அளிக்கிறது - கே.எஸ்.அழகிரி + "||" + Rajinikanth's comment on the Kashmir issue is sad Interview with KS Alagiri

காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்து வருத்தம் அளிக்கிறது - கே.எஸ்.அழகிரி

காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்து வருத்தம் அளிக்கிறது - கே.எஸ்.அழகிரி
கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் ஏற்பாட்டில் ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள் சென்னை சத்தியமூர்த்திபவனில் இருந்து வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னை, 

கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் ஏற்பாட்டில் ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள் சென்னை சத்தியமூர்த்திபவனில் இருந்து வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை கே.எஸ்.அழகிரி வழி அனுப்பி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அரசியல் சாசனத்தின் 370–வது பிரிவை நீக்கி காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கை ராஜதந்திர நடவடிக்கை என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து உள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உரிமையை பறிப்பது எப்படி ராஜதந்திரம் ஆகும்? ரஜினிகாந்தின் வார்த்தை எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

வேலூரை 3 மாவட்டங்களாக பிரிப்பது நிச்சயம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எப்போதுமே மாவட்டங்களை பிரிப்பது தவறு என்று சொல்லமாட்டேன். ஏனெனில் மாவட்டங்களை பிரிப்பதின் மூலமாக சில வளர்ச்சிகளை எட்டமுடியும். ஆனால் அந்த மாவட்ட மக்களின் உணர்வு எப்படி இருக்கிறது? என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலை நேரடியாக நடத்த தைரியம் உள்ளதா? எடப்பாடி பழனிசாமிக்கு, கே.எஸ்.அழகிரி சவால்
உள்ளாட்சி தேர்தலை நேரடியாக நடத்த தைரியம் உள்ளதா? என எடப்பாடி பழனிசாமிக்கு கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார்.
2. எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது கே.எஸ்.அழகிரி பேட்டி
எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது என கே.எஸ்.அழகிரி கூறினார்.
3. மராட்டிய கவர்னரின் தவறான போக்கை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது கே.எஸ்.அழகிரி பேட்டி
மராட்டிய கவர்னரின் தவறான போக்கை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது என்று ஈரோட்டில் கே.எஸ்.அழகிரி கூறினார்.
4. தமிழகத்தில், இன்று முதல் 11 நாட்கள் ஆர்ப்பாட்டங்கள்; காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 11 நாட்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
5. நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் “அ.தி.மு.க. ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளது” - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
“நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளது“ என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-