தேசிய செய்திகள்

முதலாவது நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி + "||" + Delhi: Prime Minister Narendra Modi arrives at 'Sadaiv Atal' - the memorial of former PM #AtalBihariVajpayee,

முதலாவது நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி

முதலாவது நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
வாஜ்பாயின் முதலாவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் மறைந்தார்.

அவர் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி பிறந்தார். பா.ஜனதாவின் முதலாவது பிரதமர் அவரே ஆவார். கடந்த 1996-ம் ஆண்டு 13 நாட்களும், 1998-1999-ம் ஆண்டுகளில் 13 மாதங்களும், பின்னர் 1999 முதல் 2004-ம் ஆண்டுவரையும் 3 தடவை அவர் பிரதமர் பதவி வகித்துள்ளார்.


வாஜ்பாயின் முதலாவது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ‘சடைவ் அடல்’ என்ற வாஜ்பாய் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த நினைவிடத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியும் மலர் அஞ்சலி செலுத்தினார்.

பா.ஜனதா தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகள் ஆகியோரும் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அங்கு ஆன்மிக பாடல்களும் பாடப்பட்டன.

வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி, பா.ஜனதாவின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவரது கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், “இந்தியா என்பது வெறும் நிலங்களின் தொகுப்போ, எல்லையால் நிர்ணயிக்கப்பட்ட நாடோ அல்ல. வாழும் தேசிய சக்தி” என்ற கவிதையும் அடங்கும்.



தொடர்புடைய செய்திகள்

1. பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது எப்படி? மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது எப்படி? என்ற நிகழ்ச்சியில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
2. மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்: டெல்லியில் நடக்கிறது
டெல்லியில் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாட உள்ளார்.
3. 72-வது இந்திய ராணுவ தினம்: ஜனாதிபதி- பிரதமர் மத்திய அமைச்சர்கள் வாழ்த்து
இந்திய ராணுவம், நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் திறன் படைத்தது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
4. அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து
அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. குடியுரிமை திருத்த சட்டத்தை சிலர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் - பிரதமர் மோடி
குடியுரிமை திருத்த சட்டத்தை சிலர் புரிந்து கொள்ள மறுத்து மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.