மாநில செய்திகள்

ஆகஸ்டு 21 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் + "||" + Private water trucks strike across Tamil Nadu from August 21

ஆகஸ்டு 21 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்

ஆகஸ்டு 21 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஆகஸ்டு 21 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை,

சென்னை கோவிலம்பாக்கத்தில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,  வரும் ஆகஸ்டு 21 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

லாரிகள் சிறைப்பிடிப்பு, லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்படுவது ஆகியவற்றைக்  கண்டித்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் தண்ணீர் எடுக்க அரசு தரப்பில் உரிமம் வழங்கும் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவது இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பல்லடம் அருகே, தண்ணீர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி
பல்லடம் அருகே தண்ணீர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2. மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது - புறநோயாளிகள் பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது. புறநோயாளிகள் பாதிப்படைந்தனர்.
3. பண்டிகை நேரத்தில் தமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ பொதுமக்கள் பாதிப்பு
தமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பண்டிகை நேரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
4. 5-வது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பு: ராமேசுவரம் மீனவர்கள் நாளை ரெயில் மறியலில் ஈடுபட முடிவு
ராமேசுவரத்தில் 5-வது நாளாக வேலை நிறுத்தம் செய்துவரும் மீனவர்கள் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
5. கணவர் கண் எதிரே பரிதாபம்: தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி - பெண் பலி
தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி, கணவர் கண் எதிரே பெண் பரிதாபமாக இறந்தார்.