தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த போலீஸ் கவனம் செலுத்துகிறது- டிஜிபி + "||" + Focus of JK police to isolate terrorists, not let them mislead people DGP

காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த போலீஸ் கவனம் செலுத்துகிறது- டிஜிபி

காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த போலீஸ் கவனம் செலுத்துகிறது-  டிஜிபி
காஷ்மீரில் பயங்கரவாதிகளை தனிமைப்படுத்தவும், மக்களை தவறாக வழிநடத்த விடாதவகையிலும் காவல்துறை செயல்பட்டு வருகிறது என டிஜிபி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ஆகஸ்ட் 5 முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் காவல்துறைக்கு பயங்கரவாதிகளை தனிமைப்படுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது, இதனால் அவர்கள் பொது மக்களை தவறாக வழிநடத்த முடியாது என்று டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கடந்த ஆண்டு முதல் படைக்கு தலைமை தாங்கி வரும் தில்பாக் சிங்,  சட்டம் ஒழுங்கை பேணுவதில் மாநில மக்கள் ஒத்துழைத்தமைக்கு நன்றியை தெரிவித்தார்.

"மாநிலத்தில் போலீஸ், துணை ராணுவப் படைகள் மற்றும் ராணுவம் அடங்கிய பாதுகாப்பு குழுக்கள் ஒரு அற்புதமான வேலையை செய்திருந்தாலும், மாநில மக்கள் அளித்த ஒத்துழைப்பை புறக்கணிக்கக்கூடாது" என குறிப்பிட்டுள்ளார். 

"பயங்கரவாதிகள் மீது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் படைகள் நடவடிக்கையில் இறங்கும் போது, மீதமுள்ள பாதுகாப்பு படைகள் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்கின்றன. பாதுகாப்புப் படையினர் எந்தவொரு சூழ்நிலையையும் கையைவிட்டு செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.” எனக் கூறும் அவர் கடந்த 13 நாட்களில் சிறிய சம்பவங்கள் நடந்திருப்பதாக ஒப்புக் கொண்டார். “ஆனால், அங்கு நடைபெற்ற சில அசம்பாவித சம்பவங்கள்   காவல்துறை அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டன. சில பொதுமக்கள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு காயங்கள் இருந்தன, ஆனால், அவர்கள் முதலுதவிக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ”என தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பொதுமக்களை தவறாக வழிநடத்த ஒரு சில பயங்கரவாதிகள், முக்கியமாக பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் முயற்சி செய்கிறார்கள், அவர்களை தடுக்கும் பணியில் காவல்துறை செயல்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.