தேசிய செய்திகள்

வடமாநிலங்களில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு 18 பேர் உயிரிழப்பு + "||" + 18 killed after heavy rains lead to flash floods, landslides in Himachal Pradesh

வடமாநிலங்களில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு 18 பேர் உயிரிழப்பு

வடமாநிலங்களில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு 18 பேர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் மழையினால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. விபத்து சம்பவங்களில் 18 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிம்லாவில் தொடர்ந்து இருநாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக பெய்த தொடர் கனமழையால் டன்ஸ் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. உத்தர்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டன்ஸ் நதியில் 20 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 18 பேரை காணவில்லை. இருமாநிலங்களிலும் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உத்தரகாண்டில் வெள்ளத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்க இந்தோ-திபெத்திய எல்லைப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பீகார்: வெள்ளத்தில் சிக்கிய துணை முதல்வர், அவரது குடும்பத்தினர் மீட்பு
பீகாரில் வெள்ளத்தில் சிக்கிய துணை முதல்வர், அவரது குடும்பத்தினரை மீட்பு படையினர் மீட்டனர்.
2. பீகாரில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 29 பேர் பலி
பீகாரில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 29 பேர் பலியாகி உள்ளனர்.
3. தர்மபுரியில் பட்டா நிலத்தில் கால்வாய் அமைக்க எதிர்ப்பு தாசில்தாரை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
தர்மபுரியில் பட்டா நிலத்தில் கால்வாய் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. பாட்னா நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது: பீகாரில் மழைக்கு 13 பேர் பலி
பீகார் மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர். பாட்னா நகரம் எதிர்பாராமல் பெய்த பலத்த மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது.
5. மகாராஷ்டிராவில் கனமழைக்கு பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு; 10,500 பேர் மீட்பு
மகாராஷ்டிராவில் கனமழைக்கு பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 10,500 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...