தேசிய செய்திகள்

லடாக் பகுதியை பழங்குடியினர் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் பா.ஜனதா எம்.பி. கோரிக்கை + "||" + Ladakh leaders urge Centre for tribal area status to protect land identity

லடாக் பகுதியை பழங்குடியினர் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் பா.ஜனதா எம்.பி. கோரிக்கை

லடாக் பகுதியை பழங்குடியினர் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் பா.ஜனதா எம்.பி. கோரிக்கை
லடாக் பகுதியை பழங்குடியினர் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என லடாக் தொகுதி பா.ஜனதா எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு–காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கிறது. 

இதில் பழங்குடியினர் வாழும் லடாக் பகுதியை பழங்குடியினர் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என லடாக் தொகுதி பா.ஜனதா எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார். அப்பகுதியை சேர்ந்த பிற தலைவர்களும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டாவிடம் கோரிக்கை மனு ஜம்யாங் செரிங் நம்கியால் வழங்கியுள்ளார். லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்ததை தொடர்ந்து, இங்குள்ள பழங்குடி மக்களின் மிகப்பெரிய கவலை என்னவென்றால், தங்களின் கலாசாரம், நிலம், அடையாளம் மற்றும் பொருளாதாரத்தை பாதுகாப்பதுதான்.  

இப்போது அங்குள்ள மக்கள் தொகையில் 98 சதவீதத்துக்கும் அதிகமானோர் பழங்குடியினர் ஆவார். அங்கு வெளி மாநிலத்தவர் புகுவதால் பிராந்தியத்தின் அடையாளம் மாறிவிடும் என அச்சம் உள்ளது. எனவே, அரசியல் சாசனத்தின் 6–வது அட்டவணையின் கீழ் லடாக்கை பழங்குடியினர் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.  
 காங்கிரஸ் அரசுகள் லடாக் பிரதேசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார் ஜம்யாங் செரிங் நம்கியால்.