தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் குண்டு வீசிக்கொலை + "||" + In West Bengal, BJP leader bomb throw dead

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் குண்டு வீசிக்கொலை

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் குண்டு வீசிக்கொலை
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் குண்டு வீசிக்கொல்லப்பட்டார்.
கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் லப்பூர் பகுதியை சேர்ந்தவர் டாலு ஷேக். இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்தார். அந்த பகுதியில் பா.ஜனதாவை வளர்ப்பதில் தீவிரமாக இருந்தார்.


இந்நிலையில், நேற்று தனது வீட்டருகே டாலு ஷேக் சென்று கொண்டிருந்தபோது, அவர் மீது ஒரு கும்பல் குண்டு வீசிவிட்டு தப்பியது. குண்டு வெடித்ததில் டாலு ஷேக் உடல் சிதறி பலியானார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு பதற்றம் நிலவி வருகிறது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக டாலு ஷேக்கின் உடலை போலீசார் எடுக்க முயன்றபோது, அவருடைய குடும்பத்தினர் தடுத்தனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

பா.ஜனதாவை வளர்ப்பதில் தீவிரமாக இருந்ததால், டாலு ஷேக்கை திரிணாமுல் காங்கிரசார் கொலை செய்துவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.