உலக செய்திகள்

நிலச்சரிவில் வீடு தரைமட்டமாகி குடும்பமே பலி + "||" + In a landslide the house collapses and the family kills

நிலச்சரிவில் வீடு தரைமட்டமாகி குடும்பமே பலி

நிலச்சரிவில் வீடு தரைமட்டமாகி குடும்பமே பலி
அஜீரா என்ற கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு தரைமட்டமாகி குடும்பமே பலியானது.
முசாபராபாத்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதில் அங்கு எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள அஜீரா என்ற கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் ஒரு வீடு தரை மட்டமானது.


அதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் குழந்தைகள். இது குறித்து தகவல் அறிந்ததும், மீட்பு படையினர் விரைந்து சென்று, உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான 7 பேரின் உடல்களையும் அவர்கள் மீட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் நிலச்சரிவால் வீடு தரை மட்டமாகி உயிரிழந்தது அங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.