மாநில செய்திகள்

பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி கோர்ட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + "||" + Separate Court soon Chief Minister Edappadi Palanisamy Announcement

பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி கோர்ட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி கோர்ட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி கோர்ட்டு அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நீதிமன்றத்தை திறந்துவைத்தார்.


விழாவில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஜி.கே.இளந்திரையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தமிழ்நாட்டில் மொத்தம் 1,149 கோர்ட்டுகள் இயங்கி வருகின்றன. சென்னையில் 126 கோர்ட்டுகளும், இதர மாவட்டங்களில் 1,023 கோர்ட்டுகளும் இயங்கி வருகின்றன.

கோர்ட்டுகளுக்கான கட்டிடங்கள் கட்டுதல், பராமரித்தல், நீதிபதிகளுக்காக குடியிருப்புகள் கட்டுதல் போன்ற நீதித்துறைக்கான மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 1000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. 2011-12 முதல் 2018-19ம் ஆண்டுகள் வரை 456 புதிய கோர்ட்டுகள் ஏற்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னையில் சிறப்பு கோர்ட்டு உட்பட 33 புதிய கோர்ட்டுகளை 2018-19ம் ஆண்டில் தமிழக அரசு அமைத்துள்ளது. நீதிமன்றங்களுக்கு 15 புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு 2018-19ம் ஆண்டில், 101 கோடியே 89 லட்சம் ரூபாய் தமிழக அரசால் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 2019-2020ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நீதி நிர்வாகத்திற்காக 1,265 கோடியே 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காரியமங்கலம், விக்கிரவாண்டி, சிங்கம்புணரி, பல்லாவரம், மதுரவாயல் ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் ஆகியவை வரும் ஆண்டுகளில் அமைக்கப்பட உள்ளன.

பணியில் இருக்கும்போது இறக்கும் வக்கீல்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேமநலநிதி 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு வக்கீல்கள் நல நிதிக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவி 4 கோடி ரூபாயில் இருந்து 8 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 220 உரிமையியல் நீதிபதி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2018-19ம் ஆண்டு நிரப்பப்பட்டுள்ளன.

தமழக அரசின் இடையறா முயற்சியின் காரணமாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஐகோர்ட்டில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஐகோர்ட்டின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசால் மின்னணு முத்திரைத்தாள் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீதித்துறையில் கணினிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையிலே, விரைவில் தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க தலைமை நீதிபதிக்கு அரசு பரிந்துரை செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.