மாநில செய்திகள்

சிறப்பு குறை தீர் திட்டத்தை சேலத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி + "||" + Edappadi Palanisamy has started the Chief Minister's mitigation program

சிறப்பு குறை தீர் திட்டத்தை சேலத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

சிறப்பு குறை தீர் திட்டத்தை சேலத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சிறப்பு குறை தீர் திட்டத்தை சேலம் வனவாசியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சேலம்,

மக்களின் குறைகளை, நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குச் நேரடியாகச் சென்று நிவர்த்தி செய்யும், "முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை" சேலம் மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

சேலம் பெரிய சோரகை பகுதியிலுள்ள கோவிலுக்கு வந்த முதலமைச்சர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். 

இது மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை நிவர்த்தி செய்யும் திட்டம் என்றும் இத்திட்டத்தின் மூலம் நகரங்களில் உள்ள வார்டுகள், கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று பொது மக்களிடம் மனுக்கள் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.

நேரில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார். மேலும் விவசாயிகளின் குறைகளை தீர்க்க புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

வருவாய், ஊரக, நகர்புற வளர்ச்சி துறையை சேர்ந்த அரசு அலுவலர் குழுவினர் மக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுவார்கள். மனுக்கள் கணினியில் பதியப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஒரு வாரத்திற்குள் அனுப்பப்படும். பின்னர் தகுதியான மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் குறை தீர்க்கும் திட்டம் விரைவில் 234 தொகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. துபாயில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தம்: தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு - 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
2. தமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் மேலும் ரூ.2,300 கோடி முதலீடு
அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க மேலும் ரூ.2,300 கோடி முதலீடு செய்ய முன்வந்து உள்ளன. இதற்காக ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்ததானது.
3. காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரம் : கட்டமைப்புகளை பார்வையிட்டார் முதலமைச்சர்
இங்கிலாந்து நாட்டில் உள்ள காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சார கட்டமைப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
4. கோட்டை கொத்தளத்தில் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார் சுதந்திரதின விழா ஏற்பாடுகள் தீவிரம்
சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் 15-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார்.
5. சேலத்தில் அரசு பொருட்காட்சி எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே அரசு பொருட்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை