உலக செய்திகள்

பிரிவு 370: காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால் + "||" + Pak foreign minister challenges PM Modi to hold referendum in JK over Article 370

பிரிவு 370: காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால்

பிரிவு 370: காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு  பாகிஸ்தான் அமைச்சர் சவால்
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தொடர்பாக பொதுவாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு–காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான்,  சர்வதேச பிரச்சினையாக்க முயற்சி செய்ததற்கு தோல்வியே மிஞ்சியது. 

இந்நிலையில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் முகமது குரோஷி சவால் விடுத்துள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை தளர்வு செய்து, அரசியல் தலைவர்களை விடுதலை செய்து அங்கு பொதுமக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடி தயாரா? என சவால் விடுத்துள்ளார் முகமது குரோஷி.

இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இனி பேச்சுவார்த்தையென்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாகதான் இருக்கும் என பதிவிட்டார். இதனை கண்டிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விவகாரங்கள் அமைச்சர் முகமது குரோஷி குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் கோர விபத்து: மலையில் பஸ் மோதி 26 பேர் சாவு
பாகிஸ்தானில் மலையில் பஸ் மோதிய கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.
2. ”விஷ பேனாக்கள் அதிக நேரம் வேலை செய்யாது” பாகிஸ்தான் குறித்து ஐநாவின் நிரந்தர இந்திய தூதர் குற்றச்சாட்டு
விஷ பேனாக்கள் அதிக நேரம் வேலை செய்யாது அவர்கள் தரக்குறைவாக நிற்கும்போது நாம் உயருவோம் என பாகிஸ்தான் குறித்து ஐநாவின் நிரந்தர இந்திய தூதர் சையது அக்பருதீன் கூறினார்.
3. பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க தடை விதிப்பு
பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
4. பாக். வான்பரப்பு வழியாக பிரதமர் மோடியின் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரியிருப்பதாக தகவல்
பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக பிரதமர் மோடி செல்லும் விமானம் பயணிக்க இந்தியா அனுமதி கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் சர்வதேச நாடுகளுக்கு பாகிஸ்தான் அழைப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மீது இந்தியாவின் ஆக்கிரமிப்பு தோரணையை அறிந்து கொள்ள சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.