உலக செய்திகள்

லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியது; 8 பேர் பலி + "||" + At least 8 killed in bus crash in northern Laos

லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியது; 8 பேர் பலி

லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியது; 8 பேர் பலி
லாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் பலியாகி உள்ளனர்.
வியன்டியானே,

லாவோஸ் நாட்டின் வியன்டியானே நகருக்கும், லுவாங் பிரபாங் நகருக்கும் இடையே சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில், 8 பேர் பலியாகியுள்ளனர்.  20 பேர் காயமடைந்து உள்ளனர்.  8 பேரை காணவில்லை.

இந்த பேருந்தில் சீனாவை சேர்ந்த 43 பேர் பயணம் செய்துள்ளனர்.  அவர்களுடன் சீன சுற்றுலா உதவியாளர் ஒருவர் மற்றும் லாவோஸ் நாட்டை சேர்ந்த ஓட்டுனர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகிய 2 பேரும் பயணித்துள்ளனர்.

பேருந்தின் பிரேக் பிடிக்கவில்லை என்றும் அதனால் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் போலீசார் கூறுகின்றனர்.  இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

இந்த சம்பவம் பற்றி அறிந்து லாவோஸ் நாட்டில் உள்ள சீன தூதரக ஊழியர்கள் மற்றும் லுவாங் பிரபாங்கில் உள்ள சீன தூதர் விபத்து பகுதிக்கு சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கடலோர கிராமங்களில் ஒத்திகை: கடல் வழியாக தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 9 பேர் பிடிபட்டனர்
கடலோர கிராமங்களில் நடைபெற்ற ஒத்திகையின்போது கடல் வழியாக தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 9 பேரை போலீசார் பிடித்தனர்.
2. நாளை கும்பாபிஷேகம்: பாதுகாப்பு பணியில் 5,500 போலீசார் டி.ஜி.பி. திரிபாதி ஆய்வு
தஞ்சை பெரியகோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு பணியில் 5,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டி.ஜி.பி. திரிபாதி நேற்று ஆய்வு செய்தார்.
3. மும்பையில் டி.வி. நடிகை தூக்கு போட்டு தற்கொலை
மும்பையில் டி.வி. நடிகை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி குமரி கடல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
5. டெல்லியில் போலீசார்-வக்கீல்கள் மோதல்: உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
டெல்லியில் போலீசார்-வக்கீல்கள் மோதல் சம்பவத்தில், உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுந்துள்ளது.