உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு + "||" + Pakistan to take Kashmir dispute with India to International Court of Justice

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் முடிவு
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த  மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த விவகாரத்தில் இந்திய அரசை பாகிஸ்தான் கடுமையாக விமர்சனம்  செய்கிறது. இருநாடுகள் இடையிலான தூதரக உறவு, ரெயில் சேவை, பேருந்து சேவை, வர்த்தக உறவை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்,  இந்தியாவில் பிரதமர் மோடி  தலைமையிலான அரசு, சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. அவரது அரசின் செயல்பாடுகள், பாகிஸ்தானுக்கும், இந்தியாவில் வாழும்  சிறுபான்மையினருக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. இந்தியாவிடமுள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை, சர்வதேச நாடுகள் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிடுவதற்காக பாகிஸ்தான் சீனா மூலமாக மேற்கொண்ட முயற்சியும் வெற்றியடையவில்லை.  

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என உலக நாடுகளும், ஐ.நா.வும் கூறிவிட்டது. இந்திய அரசு இனி பேச்சுவார்த்தையென்றால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமாகதான் இருக்கும் எனக் கூறிவிட்டது. இதற்கிடையே பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது என்பதில் இந்தியா ஸ்திரமாக உள்ளது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி, “காஷ்மீர்  விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம்,” எனக் கூறியுள்ளார் என பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ARY News TV செய்தி வெளியிட்டுள்ளது.

அனைத்து சட்ட காரணிகளையும் ஆய்வு செய்துதான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. 1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு
முஸ்லீம்களை 1947-ல் பாகிஸ்தான் அனுப்பியிருக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கிரிராஜ்சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2. இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுத போர் மூண்டால் 12.5 கோடி மக்கள் பலியாவார்கள்- பாதுகாப்பு அறிக்கை
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுஆயுத போர் மூண்டால் 5 கோடி முதல் 12.5 கோடி வரை மக்கள் பலியாவார்கள் முனிச் பாதுகாப்பு அறிக்கை தெரிவித்து உள்ளது.
3. பாகிஸ்தானில் காஷ்மீர் குறித்த பேச்சு: "தலையிட வேண்டாம்" துருக்கி ஜனாதிபதிபதிக்கு இந்தியா கண்டனம்
பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டபோது ஜம்மு-காஷ்மீர் குறித்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
4. ஹபீஸ் சயீதுக்கு தண்டனை: பாகிஸ்தானின் நடவடிக்கை மீது இந்தியா சந்தேகம்?
ஹபீஸ் சயீதுக்கு தண்டனை வழங்கிய பாகிஸ்தானின் நடவடிக்கை குறித்து இந்தியா எச்சரிக்கையாக உள்ளது
5. இந்திய கபடி அணி அனுமதி பெறாமல் பாகிஸ்தானுக்கு சென்றதால் சர்ச்சை
இந்திய கபடி அணி அனுமதி பெறாமல் பாகிஸ்தானுக்கு சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.