உலக செய்திகள்

காஷ்மீர் இருநாட்டு விவகாரம்: புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதில் + "||" + France tells Pakistan Kashmir bilateral issue, calls for restraint

காஷ்மீர் இருநாட்டு விவகாரம்: புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதில்

காஷ்மீர் இருநாட்டு விவகாரம்: புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதில்
காஷ்மீர் இருநாட்டு விவகாரம் என புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதிலளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை பாகிஸ்தான் எதிர்த்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க ஐ.நா.வில் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியை தழுவியது. இதனையடுத்து சர்வதேச நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக உள்ள பிரான்சிடம் பாகிஸ்தான் புகார் கூறியது. 

புகார் கூறிய பாகிஸ்தானிடம், காஷ்மீர் இருநாட்டு விவகாரம் என பிரான்ஸ்  பதிலளித்துள்ளது. 

பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி லீ டிரியான் மற்றும் பாகிஸ்தான் அமைச்சர் முகமது குரேஷி ஆகியோர் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் பிரான்ஸ் நிலைப்பாட்டை விளக்கிய லீ டிரியான், "இது இருநாடுகள் இடையிலான விவகாரம், இருதரப்பு இடையிலான அரசியல் பேச்சுவார்த்தையின் கீழ் பிரச்சினைக்கு தீர்வு கண்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும்” என கூறியுள்ளார். பதட்டங்களை அதிகரிக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் இருதரப்பும் தவிர்ப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார் லீ டிரியான்.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
2. இந்தியாவும் பாகிஸ்தானும் நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா விருப்பம்
இந்தியாவும் பாகிஸ்தானும் நல்லுறவுடன் செயல்பட வேண்டும் என்று சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
3. நதி நீரை இந்தியா நிறுத்தினால் பதிலடி கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது : பாகிஸ்தான்
நதி நீரை இந்தியா நிறுத்தினால் பதிலடி கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
4. இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? கங்குலி பதில்
இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கங்குலி பதில் அளித்துள்ளார்.
5. இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறி இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.